ADMK BJP: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் வெளியானது, அதற்கு ஏற்றார் போல் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் எடப்பாடிக்கு ஆதரவாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் நின்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்குமா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இப்படி முடிவுக்கு வராத கூட்டணி, முன்னாள் நிர்வாகிகள் என பலவற்றுக்கும் முடிவில்லாமலேயே இருந்து வந்தது. அப்படி இருக்கையில் திடீரென்று அமித்ஷாவை காண முதல்வர் டெல்லி சென்றுள்ளார்.
மேற்கொண்டு ஓபிஎஸ் ம் சென்றுள்ளார். முதலில் எடப்பாடியை அவர்களது நிர்வாகிகளுடன் சந்தித்து விட்டு பின்பு தனியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் பாஜக வுடன் கூட்டணி வைத்தால் எம் மாதிரியான நிபந்தனைகள் இருக்கும் என்பதை விவரித்துக் கூறியுள்ளார். அதில் முதலாவதாக, பாஜகவில் அண்ணாமலை இருப்பது குறித்து நீங்கள் தலையிடக்கூடாது. அவர் இருப்பதும் இல்லாதிருப்பதும் தலைமையில் இருக்கும் நாங்கள்தான் முடிவெடுப்போம்.
அதேபோல நீங்கள் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பதாக தெரியவில்லை. அதனால் எங்களுடன் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் உங்களுக்கு இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் எடப்பாடி பழனிசாமி மாற்றுக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் சரி என்று கூறிவந்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அந்தவகையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் குறிப்பாக ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரின் கூட்டணியில் கைகோர்ப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது.