Chennai: 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுடைய பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்துவிடக் கூடாதென பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நடைபெற்ற முடிந்துவிட்டது. இதனையடுத்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வரும் மாதம் எட்டாம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வு நடப்பதற்கான வினா தாள்களை எமிஸ் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நகல் எடுக்கப்படும்.
அப்படி நகலெடுக்கும் போது கடந்த முறையே வினாத்தாள் கசிவு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை வைத்து தற்போது பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் நகல்கள் எதுவும் கசிந்து விடக்கூடாது. அப்படி பிரதிகள் வெளியிடப்பட்டது என்ற புகார்கள் வந்தால் கட்டாயம் அது ரீதியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் எனத் தொடங்கி வட்டார கல்வி அலுவலர்கள் வரை பலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இறுதியாக நடக்கும் இந்த பொது தேர்வு ரீதியாக எந்த ஒரு புகார் வராத வண்ணம் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். மேற்கொண்டு மாணவர்களுக்கு கடந்த மாதம் 8 ஆம் தேதி தேர்வு தொடங்கி 24 ஆம் தேதி முடிய உள்ளது. இதற்கடுத்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கு 1 மாதம் கால அளவில் கோடை விடுமுறை விடப்படும்.