நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

Photo of author

By Divya

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

Divya

ம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நிச்சயம் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.முதலில் பிறந்த குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கு இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 வயது வித்தியாசம் இருக்க வேண்டியது முக்கியம்.

அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் தங்கள் பொருளாதார தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்னர் குழந்தையின் எதிர்கால நலனிற்காக குறைந்தது 2 அல்லது 3 வருடங்களுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

சிலர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் காட்டுவதில்லை.பொருளாதார சூழல்,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட தயக்கம் காட்டுகின்றனர்.முதல் குழந்தையை வளர்ப்பதற்குள் நிறைய சவால்களை சந்திக்க நேரிடுவதால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான விருப்பம் இளம் அம்மாக்களிடையே குறைகின்றது.

குழந்தையை பராமரிக்க குடும்ப உறவுகள் துணை இருந்தால் நீங்கள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடலாம்.உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கிறது என்றால் நீங்கள் தாராளமாக இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடலாம்.

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு குழந்தைகளுக்காக முழு நேரத்தையும் செலவிடுங்கள்.முதல் குழந்தையை கவனித்துக் கொண்டது போல் இரண்டாவது குழந்தையையும் கவனியுங்கள்.

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துங்கள்.இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில்லை பிரச்சனை இல்லையென்றால் தாராளமாக திட்டமிடலாம்.இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி தரும் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடலாம்.