பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

Photo of author

By அசோக்

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

அசோக்

sengottaiyan

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி.

டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், அமித்ஷாவுக்கு அதில் விருப்பமில்லை என்கிறார்கள். எனவே, பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் அமித்ஷா.

ஏற்கனவே அதிமுகவில் தனியாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் இதற்கான வேலைகளை செய்ய துவங்கிவிட்டார்.. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து அதிமுக தலைமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. ‘இப்போது இது வேண்டாம். பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும்’ என்பதே அமித்ஷாவின் நோக்கமாக இருக்கிறது.

அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக. இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

poster

இந்நிலையில், மதுரை முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. நன்றி.. நன்றி. இப்படிக்கு மிசா C.S. செந்தில் மத்திய தொகுதி செயலாளர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி இருக்கும்போது செங்கோட்டையனை பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.