Holiday : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து தற்போது பத்து மற்றும் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வானது கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி தொடங்கி இம்மாதம் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இவர்களை அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இம்மாதம் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வருடம் தோறும் ஆழி தேர் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த தேர் திருவிழாவானது வரும் ஏழாம் தேதி வர உள்ளதால், அன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று நடக்கவிருந்த தேர்வை ஒத்திவைத்து அம்மாவட்ட ஆட்ச்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது ஒத்திவைக்கப்படவில்லை, வழக்கம்போல் நடைபெறும் என்று கூறியுள்ளார். இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் அந்நாளில் தேர்வு எழுத வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வானது ஏழாம் தேதிக்கு மறுநாளே நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். இதனால் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் கட்டாயம் தேர்வு எழுத வருமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.