ஒரே நாடு.. ஒரே தேர்தல் விரைவில்!.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய அப்டேட்..

Photo of author

By அசோக்

ஒரே நாடு.. ஒரே தேர்தல் விரைவில்!.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய அப்டேட்..

அசோக்

nirmala

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவு ஆளுநர்களை நியமிப்பது, அதன் மூலம் அரசுக்கு தொல்லை கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், அதிமுக, திமுக எனும் இரண்டு திராவிட காட்சிகளை தாண்டி பாஜக-வால் இங்கு கால்பதிக்க முடியவில்லை. தமிழக மக்களும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போடுகிறார்களே தவிர பாஜகவுக்கு ஓட்டு போடுவதில்லை. அதோடு, பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. சமீபத்தில் கூட மும்மொழிக் கொள்கையை திமுக அரசு எதிர்த்தது.

இதனால் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கூட பாஜக அரசு கொடுப்பதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக ஜி.எஸ்.டி கொடுப்பது தமிழக அரசுதான். அதோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை அமுல்படுத்த பாஜக அரசு விரும்புகிறது. அதாவது, இந்தியா முழுவதும் எல்லா தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இதை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இதற்கான நடைமுறையை குடியரசு தலைவர் தொடங்குவார்’ என எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக விழாவில் பேசியிருக்கிறார்.