முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகாவின் 29 வது பிறந்தநாளன இன்று அவரது பழைய வாழ்க்கை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் கலக்கி வரும் ராஷ்மிகாவிற்கு ஆரம்ப கட்ட காலத்தில் பெருமளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இவருக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்தது. ஆனால் அது திருமணம் வரை நீடிக்கவில்லை.
தற்போது வரை ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம் நின்று போனதற்கான எந்த ஒரு காரணத்தையும் எங்கும் தெரிவிக்கவில்லை. ஒரு தனியார் ஊடகத்தில் இவர் ஆரம்ப கட்டத்தில் எப்படியெல்லாம் வறுமையை சந்தித்தார் என்பது குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ, பிறந்த நாளான இன்று வைரலாகி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் எங்களது வீட்டு வாடகை கட்ட கூட பணம் இருக்காது, நாங்கள் மற்றவர்களிடம் பேசவே தயக்கம் காட்டுவோம் என அதில் கூறியுள்ளார்.
ஆனால் இன்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயின்களுடன் போட்டி போட்டு வலம் வருகிறார். கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு மட்டும் பத்து கோடிக்கும் மேல் சம்பளம் பெறுவதாக கூறுகின்றனர். இவரது சொத்து மதிப்பும் 50 கோடியை தாண்டி விட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. அதே போல இவரும் விஜய் தேவர் கொண்டாவும் காதலித்து வருவதாகவும் , டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் ஒன்றாக சேர்ந்து விடுமுறையை கழிக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.