Cinema Talks: தமிழ் சினிமாவிலும் சரி தமிழகத்தை முன்னெடுத்து சென்ற தலைமையிலும் சரி மறக்க முடியாத ஜாம்பவான் என்றால் எம்.ஜி.ஆர் தான். தற்பொழுது வரை இவரது படங்கள் பொது கருத்துடன் இன்றளவும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி எம்ஜிஆர் சினிமா துறையில் இருக்கும் போது இவரையே ஒருவர் பெயர் சொல்லி அழைத்துள்ளார். அதிலும் சக நடிகர்களை எம்ஜிஆர் யிடம் பழகுவதற்கும் பேசுவதற்கும் தயங்கிய நிலையில் சக நடிகை பெயர் சொல்லி அழைத்த தகவலானது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த காலகட்டத்தில் பெண் இயக்குனர் பெண் எடிட்டர் என்பதெல்லாம் சற்று குறைவுதான். அந்த வகையில் அனைத்திலும் முன்னணியாக விளங்கியவர் தான் நடிகை பானுமதி, இவர் எம் ஜி ஆரை காட்டிலும் ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் எப்பொழுதும் அனைவர் முன்னிலையிலும் மிஸ்டர் எம் ஜி ராமச்சந்திரன் என்றுதான் அழைப்பாராம். இவர் அப்படி கூப்பிடுகிறாரே என்று எம்ஜிஆர் ஒரு போதும் முகம் சுளிக்காமல், மிகவும் மரியாதை தன்மையுடன் அவரை நடத்துவாராம்.
எம்ஜிஆர் பொதுவாகவே அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் தான் நடந்து கொள்வாராம். இருப்பினும் அவர் இருக்குமிடம் சற்று பதற்றமாக தான் இருக்குமாம், அப்படி இருக்கும் பட்சத்தில் பானுமதி துளி கூட பயப்படாமல் அவர் பெயரை சொல்லி தான் எப்பொழுதும் அழைப்பாராம். இதனை ஒருபொழுதும் எம்.ஜி.ஆர் மறுத்ததில்லை எனக் கூறுகின்றனர். எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த நடிகை என்ற பெயரும் அவருக்கு உண்டு எனக் கூறுகின்றனர்.