நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாளை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிட்ட இந்த மருத்துவக் கல்லூரி தற்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை திமுக அரசாங்கம் தங்களின் சாதனையாகச் சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். “முன்னாள் அதிமுக ஆட்சி திட்டமிட்டதையே ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையாக மாற்றிவிட்டது” என விமர்சித்து பேசியுள்ளார்.
இத்திட்டம், மத்திய அரசின் ஒப்புதலுடன் 447 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மூலம் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியிலேயே துவக்கினர். ஆனால் நான்கு ஆண்டுகளாக இதனை கண்டுகொள்ளாமல் தேர்தலசமயத்தில் வேலையை முடித்து திறப்பு விழாவை இவர்கள் பெயரில் நடத்துகின்றனர். அதேபோல சிம்லாவுக்குப் பிறகு மலைப் பிரதேசத்தில் கட்டப்படும் இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி இது தான் என்பதால் தனி கவனம் பெற்றுள்ளது.
இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 150 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கல்வி வழங்கவுள்ளது. இது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கவும் பட்டுள்ளது. இப்படி இருக்கையில் திமுக ஸ்டிக்கர் ஓட்டும் அரசாகவே செயல்படுவதாக எடப்பாடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேற்கொண்டு இது ரீதியாக சோசியல் மீடியா எங்கும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.