வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. ஆனால், சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து பெரும் பில்டப் செய்யப்பட்ட கங்குவா படமும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. ஹாலிவுட் படம் போல மேக்கிங்கில் அசத்தியிருந்தார் சிவா. கதை கூட ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ஆனால், சூர்யாவின் மீது இருந்த வன்மத்தில் ஒரு கூட்டம் படத்தை பற்றி நெகட்டிவாக பேச துவங்கியது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சிலர் சூர்யாவை திட்ட அந்த வீடியோக்கள் வைரலாகி படத்தின் வசூலையே பாதித்துவிட்டது.

அடுத்து கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்தில் நடித்துவிட்டு அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் வெற்றிமாறனும், சூர்யாவும் எப்போது வாடிவாசலுக்காக இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால், அது தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், வாடிவாசல் துவங்குவதற்கு முன் ஒரு காதல் கதையில் நடித்துவிடலாம் என்கிற எண்ணம் சூர்யாவுக்கு இருக்கிறது. அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் செம லவ ஸ்டோரி என்கிறார்கள். இது முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்திற்கு செல்வார் என்கிறார்கள்.