சீரியல் நடிகர் ஸ்ரீதரன் திடீர் மரணம்!… ரசிகர்கள் அதிர்ச்சி…

0
70
sridhar

கே.பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் ஸ்ரீதரன். அதன்பின் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் அப்பா வேடத்தில் அதிகமாக நடித்திருக்கிறார். சின்னத்திரை சீர்யல்களை விரும்பி பார்ப்பவர்களிடம் பிரபலமாக இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். சென்னை தி.நகரில் குடும்பதுடன் வசித்து வந்தார். இவரின் இறப்பு பற்றி பேசியுள்ள சீரியல் நடிகர் கம்பன் மீனா ‘இப்போதுதான் ஷூட்டிங் முடித்து வந்தேன். ஸ்ரீதரன் இறந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். என்னால் இதை நம்பவே முடியவில்லை’ என பேசியிருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாமரை சீரியலிலும் இவர் நடித்தார். இந்த சீரியல் 500 எபிசோட்களை தண்டி ஒளிபரப்பானது. இந்த தொடரில் ஸ்ரீதரன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவரின் மரணம் இவருடன் நடித்த சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

sriodhar

ஸ்ரீதருக்கு வயது 62. நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலும் ஸ்ரீதரின் மரணத்திற்கு இறங்கல் தெரிவித்திருக்கிறது.

Previous articleமிஸ்டர் ஸ்டாலின். நீங்க உங்க அப்பா மாதிரி இல்ல!.. நிர்மலா சீதாராமன் பேச்சு!…
Next article3 லட்டு ஹீரோயின்களை தட்டி தூக்கிய பிரசாந்த்!. அதுவும் இயக்குனவர் அவரா?!…