ADMK: சட்டப்பேரவையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து உள் நுழைந்தனர். குறிப்பாக அதில் அந்த தியாகி யார்?? என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு, சட்டப்பேரவையில் மதுபான கடை ரீதியாக பேச வேண்டுமென்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயக்கர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டாயம் சட்டசபையில் இது குறித்து பேச முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
உடனடியாக அதிமுக ஆட்சி காலத்தில் இதே போல் தான் திமுகவும் ஸ்டெர்லைட் குறித்து பேசும் பொழுது வழக்கு நிலுவையில் உள்ளது பேசக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தீர்கள். அதேபோல தான் இப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். இவர் அவ்வாறு கூறியதும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கையில் பதாகைகளுடன் நின்றனர். அதில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அச்சடிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக அந்தப் பதாகைகளைப் பிடித்து காண்பித்த அனைவருக்கும் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் கொடுத்து சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சட்டசபையை விட்டு எடப்பாடி உட்பட அனைவரும் வெளியேறினர். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் அங்கேயே இருந்தனர். மேற்கொண்டு சபாநாயகர் கருப்பு பேட்சை வெளிய கழட்டிவிட்டு உள் நுழையுமாறு கூறினார். அச்சமயத்தில் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் வெளியேறாமல் பேட்சை கழட்டிவிட்டு சட்டப் பேரவைக்குள் வந்தார்.
தனது தொகுதி சாயக்கழிவு பிரச்சனை ரீதியான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசினார். மற்ற அதிமுக ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்த போது செங்கோட்டையன் மட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் நின்றது எடப்பாடிக்கும் இவருக்கும் உள்ள போரை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதேபோல செங்கோட்டையன் ஓபிஎஸ் உடன் இணையப் போகிறார் என்பதையும் இதன் மூலம் சூசகமாக கூறியுள்ளார்.