BJP NTK: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியானது சமீப நாட்களாக இணக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாகவே நடந்து கொள்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் வகையிழும் தொகுதி வரையறை உள்ளிட்டவற்றை கண்டித்து அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை திமுக நடத்தியது. ஆனால் அதில் அனைத்திற்கும் குரல் கொடுக்கும் சீமான் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போதே சீமான் மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை இருக்கும் என கூறி வந்தனர்.
இதனின் ஒரு படி மேலாக, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமானும் அண்ணாமலையும் கைகோர்த்து பேசிக்கொண்டனர். குறிப்பாக அண்ணாமலை சீமானிடம், விட்றாதீங்க அண்ணா எனக் கூறியது இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. தற்பொழுது மீண்டும் அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதிலும் சீமான், நான் இந்த நாடகத்திற்கெல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று மழுப்பும் பதிலை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
இப்படி இருக்கையில் இன்று சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சேர்ந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதில் அண்ணாமலை சீமான் குறித்து வெகு விமர்சையாகவே புகழ்ந்து பேசியுள்ளார். ஒவ்வொரு வார்த்தையிலும் தலைவர், தளபதி என பேசினார். நான் சீமானை கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் என்றெல்லாம் கூற மாட்டேன் போர்க்களத்தில் நிற்கும் தளபதி தான் இவர்.
அப்படித்தான் அவரைப் பார்க்கிறேன். இவர் தமிழக அரசியலிலேயே தனிப்பெரும்பான்மையுடைய தலைவர். எதிர்வரும் அனைத்தையும் எதிர்த்து தைரியமாக போராடக் கூடியவர். எங்களுக்குள் ஒரே வித்தியாசம் தான். நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன், அவர் தமிழில் தேசத்தை பார்க்கிறார் அவ்வளவுதான். தற்போது வரை எனது ஆதரவு அவருக்கு உள்ளதென்றால், அதற்கு முக்கிய காரணம் நேர்மையம் நெஞ்சுருதியும் அரசியலில் உள்ளது என்றால் அதில் அவர் ஒருத்தருக்கு தான்.
இதேபோல தேசியக் கட்சிகள் மாநில நலனை முக்கியமாகவும், மாநிலக் கட்சிகள் தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது தான் நல்ல ஆளுமையுடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். ஆனால் இன்று அரசியல் சூழலானது அப்படி இல்லை. மாநில கட்சியின் தேசிய கட்சிகளும் உச்சகட்டத்திற்கு செல்லும் பட்சத்தில் நடுவில் உள்ள மக்கள்தான் என்ன நடக்கிறதென்று அறியாமல் முழிக்கிறார்கள் என பேசினார்.