NTK: விக்ரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இது ரீதியாக இவர் மீது புகார் அளித்த நிலையில் சைபர் க்ரைம் கைது செய்தது. இந்த கைதுக்கு பின்னணியில் திருச்சி எஸ் பி வருண்குமார் தான் உள்ளார் என்பதை சீமான் கூறினார். அத்தோடு குறிப்பிட்ட சாதி வகுப்பினரை சொல்லி அவர்களுக்கெல்லாம் இவரை பிடிக்கவே பிடிக்காது என்று குறிப்பிட்டும் பேசியிருந்தார்.
இது அனைத்தும் பூகமமாக வெடிக்கவே, எஸ் பி வருண்குமார், எங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் போன் செய்து கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்திருந்தார். மேற்கொண்டு அதில், சாதி வகுப்பினரை குறிப்பிட்டு எப்படி என்னை பேசலாம் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கானது திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் சீமான் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
குறிப்பாக நீதிபதி உத்தரவிட்டும் ஆஜராகவில்ல்லை. இன்று இந்த வழக்கானது அமர்வுக்கு வந்த நிலையில், எஸ் பி வருண் குமார் ரீதியான சாட்சியங்கள் கூறப்பட்டு அவர் தரப்பு வாதங்கள் முடிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பு பேசுவதற்காக சீமான் அங்கு இல்லை. இதனால் நீதிபதி இன்று மாலைக்குள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கட்டாயம் பிடிவாரண்ட் உத்தரவு போடப்படும் என கூறியுள்ளார். சீமான் இன்று மாலைக்குள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் கைது செய்யப்படுவார்.