நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு கூத்து பட்டறையில் நடிப்பை கற்றுக்கொண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விமர். இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியை கொடுத்த பொழுதிலும் பல படங்கள் தோல்வியையே வழங்கியுள்ளன.
இவருடைய பாஷையும் உருவ தோற்றமும் கிராமத்து படங்களுக்கு அருமையாக பொருந்தின. இந்த காரணத்திற்காகவே கிராமத்து கதைகளாக தேடி தேடி நடிக்க தொடங்கினார் நடிகர் விமல். களவாணி திரைப்படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களை தன் பக்கம் இருத்தவராக இவர் கருதப்படுகிறார்.
களவாணி படத்தில் எப்படி ஹீரோயினை காரில் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வாரோ அதே போன்று தான் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் காரல் சென்று நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்து இருக்கிறார். அதன் பின்பு மார்க்கெட்டை இழந்த விமல் அவர்களுக்கு சுந்தர் சி கலகலப்பு திரைப்படத்தின் மூலம் மற்றொரு வாய்ப்பை வழங்கினார்.
நடிகர்களாக நடித்த சம்பாதித்த பணத்தை வைத்து பலரும் தயாரிப்பாளராக மாறி இன்னும் பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ நினைக்கும் பொழுது விமல் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. மன்னர் வகையறா திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக உருவெடுத்த விமல் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனாளியாக மாறியுள்ளார். இருப்பினும் துவண்டு போகாமல் அனைத்து கடன்களையும் அடைத்து முடித்துவிட்டு மீண்டும் படம் நடிப்பதில் இறங்கினார்.
இப்படி அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க தன்னுடைய வாழ்க்கை குறித்து அவரே ஊடகம் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
ஆண்டவன் புண்ணியத்தில் தான் நன்றாக இருப்பதாகவும் எப்பொழுதுமே என்னுடைய தேவைக்கு பணத்தை செலவு செய்யாமல் பணம் எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல என்னுடைய செலவுகளை மாற்றி அமைத்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார். அதிலும் கூத்தப்பட்ட ரயில் 2000 ரூபாய் சம்பளம் பெற்ற பொழுது எப்படி ஜாலியாக சுற்றி குடித்துக் கொண்டு செலவு செய்தேனோ அதேபோன்றுதான் இன்று கோடிகளில் சம்பளம் பெற்றாலும் நடந்து கொள்கிறேன் என தெரிவிப்பது ரசிகர்களை உணர்ச்சி வசப்பட செய்துள்ளது.