கொரோனா காலகட்டத்தில் ஓ டி டி யின் வளர்ச்சியானது அசுர வளர்ச்சியாக மாறியது. கொரோனா காலம் முடிவுற்ற பின்னும் திரையரங்குகளில் நேரடியாக திரைப்படங்கள் வெளியிடுவது குறைவாகவே இருக்கிறது.
இதனால் பலரும் OTT யில் வெளியிடப்படக்கூடிய வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்க தொடங்கியுள்ளனர். எனினும் வெப் சீரிஸில் கூட அனைத்தும் வெற்றி அடைவதில்லை. இவை ஒருபுறம் இருக்கா திரையரங்குகளின் உரிமையாளர்கள் ஓ டி டி தலங்கள் வந்தது முதலே மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். அப்படியாக தான் சமீபத்தில் நடிகர் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் திரையிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதை களத்துடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புகளோடு காத்திருந்து திரைப்படத்தை பார்த்த பின் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். காரணம் இத்திரைப்படத்தில் பெரிய அளவில் திரைக்கதை இல்லை என்றும் சிறந்த நடிகர்களை வைத்துக் கொண்டு இது போன்ற மொக்கையான கதைகளை எடுப்பதா என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது திரைப்படத்தல் சித்தார்த்துக்கு அப்பாவாக பேசப்பட்ட நடிகரை பின்பு வேண்டாம் என படத்தை விட்டு விலகி இருக்கின்றனர். அவர் தற்பொழுது படம் ஓடாததற்கு தன்னுடைய வரலாறை காரணம் என்பது போல சமூகவலை தளத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. எப்பொழுதுமே தண்ணி ஒரு படத்திலிருந்து நீக்கிவிட்டால் அத்திரைப்படம் திரையரங்குகளுக்கு செல்லாது என்றும் அப்படியே மீறி சென்றாலும் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறாமல் மொக்கையான திரைப்படமாகவே பார்க்கப்படும் என்றும் தன்னுடைய பதிவில் தெரிவது இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, இது தன்னுடைய சினிமா வாழ்க்கையின் வரலாறு என்றும் அந்த வரலாறு இப்பொழுது வரை மாறாமல் அப்படியே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.