எடப்பாடி போட்ட ஆர்டர்.. சட்டென பணிந்த செங்கோட்டையன்!! பதவிக்காக இப்படியா??

Photo of author

By Rupa

எடப்பாடி போட்ட ஆர்டர்.. சட்டென பணிந்த செங்கோட்டையன்!! பதவிக்காக இப்படியா??

Rupa

Edappadi Palaniswami immediately obeyed the order

அதிமுகவில் சீனியர் சிட்டிசனான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டை சட்டசபை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்கையில் செங்கோட்டையன் டெல்லி சென்று தனியாக அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. மேற்கொண்டு இவர் ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை தன்வசம் கொண்டு வரவே இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது.

அதேபோல எடப்பாடி சட்டசபையை விட்டு வெளியேறினாலும் இவர் தனது தொகுதி ரீதியான பிரச்சனைகளை கூற வேண்டும் என்பதற்காக இருந்து விடுகிறார். இவையனைத்திற்கும் மேலாக நேற்று கருப்பு பேட்ஜ் ஏந்தி, சட்டப்பேரவைக்குள் உள் நுழைந்தவர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் வெளியேறிய நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மட்டும் சட்டப்பேரவையில் இருந்தனர்.

அங்கு செங்கோட்டையன் வெளியேறாமல் பேட்சை வெளியே கழட்டி விட்டு உள் சென்று தனது வட்டார பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றியது அதன் ரீதியாக பேசினார். இவ்வாறாக அவர் செய்தது ஓபிஎஸ் உடன் கூட்டணி என அனைவரும் கூறினர். ஆனால் இன்று சட்டசபையில் அதிமுக தலைமைக் கிணங்க அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். அதில் , செங்கோட்டையன் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அவரும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார். தலைமையை எதிர்ப்பதாக வெளிவந்த செய்தி அனைத்தும் பொய் தான் என்பதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார்.