ADMK TVK: அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்படும் செங்கோட்டையன் தற்பொழுது மாற்றுக் கட்சிக்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வரிசையில் திமுக, பாஜக, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இவர் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் பாஜகவுடன் கூட்டு வைத்து அதிமுகவை கைப்பற்றுவார் எனக் கூறி வந்தனர்.
ஆனால் இன்று கோட்டை வட்டாரமானது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அமித்ஷாவுடன் ஏற்பட்ட சந்திப்பில், இவருக்கு சாதகமாக எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லையாம். எடப்பாடி உடன் சமரசமாக போங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளாராம். இதனால் வருத்தமடைந்த செங்கோட்டையன் மாற்று யோசனையில் உள்ளாராம்.
அதாவது எந்த கட்சிக்கு சென்றாலும் இவர் சார்ந்த கொங்கு வாக்குகள் அனைத்தும் இவருக்கே கிடைக்கும். அதனால் விஜய்யுடன் இணையுங்கள் என்று இவரது நெருங்கிய வட்டாரம் அறிவுறுத்துகிறதாம். குறிப்பாக அவரும் கூட்டணி கட்சி இல்லாமல் தனித்த நிற்கிறார், இச்சமயத்தில் அவருக்கு கை கொடுத்தால் பக்கபலமாக இருக்கும் எனக் கூறுகின்றனராம்.
ஆனால் செங்கோட்டையன் குழப்ப நிலையிலேயே உள்ளதாகவும் எந்த பக்கம் செல்வதென்று தெரியவில்லையாம். மேற்கொண்டு இவர் விஜய்யுடன் இணையும் பட்சத்தில் அவருக்கு கட்சியில் முக்கிய இடம் கொடுக்கப்படும், அதுமட்டுமில்லாமல் அதிமுகவிற்கு அது பெரும் அடியாகவும் விழும் எனக் தெரிவித்துள்ளனர். முன்னதாகவே எடப்பாடியுடன் மோதல் போக்கு இருக்கும் பட்சத்தில் இதனை அவருக்கு சாதகமாக ஏற்க முடிவு செய்துள்ளாராம்.