BJP NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜகவில் இணைப்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். இது குறித்து டெல்லி மேலிடத்திலும் பேசியுள்ளாராம். இதனால் தான் சீமானை ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுக்காமல் முப்பொழுதும் புகழாரம் சூட்டியே வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கல்லூரியில் சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை, சீமான் குறித்து அவர்தான் தளபதி” இவரைப் போல ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார்.
சீமானும் அண்ணாமலையை, பாஜக தமிழகத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் அதற்கு முக்கிய காரணம் இவர் தான் எனக் கூறியுள்ளார். இப்படி மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் புகழாரம் சூடிக் கொள்கின்றனர். அதேபோல சீமான் வாக்குக்கு பணம் அளிக்காமல் தனி பெரும்பான்மையை சேர்த்து உள்ளதால் பாஜகவுடன் இணையும் பொழுது என் டி ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இவரை நிறுத்தலாம் என கூறுகின்றனர்.
ஆனால் சீமான் இதற்கு ஒத்துவர மாட்டார் என்பதால் ஒவ்வொரு முறையும் பாஜக இவருக்கு முட்டுக் கொடுத்து வருகிறதாம். தற்சமயம் சீமானும் ஒரு சில நேரங்களில் பாஜகவுடன் கூட்டு வைக்க நினைப்பதாகவும் அதனாலையே பாஜகவை எதிர்க்கும் எந்த ஒரு கண்டன போராட்டத்திலும் கலந்து கொள்வதில்லையாம். வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் பாஜகவுடன் சீமானை கூட்டணியில் நிறுத்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மோடி திட்டமிடுவதாக கூறுகின்றனர். மேற்கொண்டு சீமான் இணையும் பட்சத்தில் எடப்பாடி முக்கியத்துவம் குறையவும் செய்யும்.