Cinema: ராமராஜன் 70களில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருந்தார். இவர் மீனாட்சி குங்குமம் படத்திற்கு பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, எங்க ஊரு காவல்காரன், வில்லுப்பாட்டுக்காரன் என பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தார். இவையனைத்தும் கிராமம் சார்ந்து எடுக்கப்பட்டதால் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு நடிகை நளினியை காதலித்து வந்தார். இருவரும் பரஸ்பர உறவுடன் காதலித்து வந்த நிலையில் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்ச்சியை எம்ஜிஆர் வெகு விமர்சையாக எடுத்து நடத்தினார். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த தருணத்தில் 14வது வருடம் இவர்கள் திருமணம் முற்றுப்புள்ளிக்கு வந்தது. 13 ஆண்டு பந்தத்தை 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால் இவர்களின் குழந்தைகளின் திருமணம் நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் மனக்கசப்பு ஏற்படாமல் சேர்ந்து நடத்தினர்.
அதேபோல நடிகை நளினியும் எந்த ஒரு பேட்டி கொடுத்தாலும் சரி தனது கணவரை விட்டுக் கொடுப்பதில்லை. அதே போல தான் ராமராஜனும் நளினி குறித்து அவதூறு கருத்தை தற்போது வரை தெரிவித்ததில்லை. ஆனால் சமீப காலமாக, ராமராஜன் நளினி மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்துள்ளது. இது குறித்து தற்பொழுது ராமராஜன் வாய் திறந்துள்ளார், அதில், நளினியும் நானும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை நடக்காத விஷயத்தை பற்றி ஏன் இப்படி தவறான கருத்தை பரப்புகிறீர்கள்?? இது எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை கொடுக்கிறது.
நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்பதில் ஒரு துளிக் கூட உண்மை இல்லை. நாங்கள் பிரிந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது நான் தனியாக வாழ பழகிக் கொண்டேன் இனிவரும் நாட்களில் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பாதீர்கள் இது மிகவும் வருத்தமடை செய்கிறது என்று கூறியுள்ளார்.