TN Gov : தமிழக அரசானது நியாய விலை கடை மூலம் பல்வேறு தரப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அது மட்டுமின்றி அரிசி பருப்பு சர்க்கரை உள்ளிட்டவையையும் வழங்குகிறது. மேற்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நாளடைவில் கொண்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர். இது ரீதியாக குழு அமைத்து நேரடியாக அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து தரவுகளை திரட்டவும் உத்தரவிட்டுள்ளனர்.
இப்படி இருக்கையில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது மட்டுமின்றி கூடுதலாக இரண்டு புதிய அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அதில் விண்ணப்பம் செய்த 19.6 லட்சம் பேருக்கு தற்போது வரை ரேஷன் அட்டையானது வழங்கப்பட்டு விட்டது. மேற்கொண்டு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் நாளடைவில் வழங்கப்படும் என கூறியுள்ளனர். அதேபோல தொலைந்து போன ரேஷன் கார்டுகளை இனி சுலபமாக அதன் நகல் வைத்து புதிய ரேஷன் அட்டையை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
இது ரீதியாக இனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை. அதாவது தொலைந்து போன ரேஷன் அட்டையின் நகல் இருந்தால் அதை வைத்து இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்யலாம். புதிய குடும்ப அட்டையானது உங்களது முகவரிக்கு தபால் மூலம் வந்துவிடும். மேற்கொண்டு அதை வைத்து நியாய விலை கடையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.