பாஜக மாநில தலைவராக இவரை தான் போட வேண்டும்.. எடப்பாடி போட்ட ஆர்டர்!! அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பா??

Photo of author

By Rupa

பாஜக மாநில தலைவராக இவரை தான் போட வேண்டும்.. எடப்பாடி போட்ட ஆர்டர்!! அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பா??

Rupa

He should be made the state president of the BJP. A chance for Annamalai again??

ADMK BJP:அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை பதவி நீக்கம் செய்யவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை ஓர் பேட்டியில் கட்டாயம் மாநில தலைவர் தேர்தல் உண்டு. அந்த போட்டியில் நான் இல்லை என்று தெள்ளந் தெளிவாகவே கூறிவிட்டார். இருப்பினும் இவரது தொண்டர்கள் விடாது சமூக வலைத்தளம் என தொடங்கி பல இடங்களில் அண்ணாமலை தான் மாநில தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை டெல்லி மேலிடம் சிறிதும் கண்டு கொள்வதில்லை. மாறாக இவருக்கு பதில் வேறு யாரை அமர்த்தலாம் என்பது குறித்து தான் ஆலோசனை நடந்து வருகிறதாம். அதேபோல எடப்பாடியும் அண்ணாமலையும் ஒரு சேர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கட்டாயம் எடப்பாடி யின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறாராம். இதனாலையே அண்ணாமலை பாஜக தலைமை பொறுப்பில் இருக்கவே கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு வானதி சீனிவாசன், நயினார் ராகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தமிழிசை தலைவராக வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அதிமுக ரீதியாக அவதூறு கருத்தை அண்ணாமலை தெரிவித்த போதே அவ்வாறு பேசியது தவறு என்று எதிர்த்தவர். இதனால் இருவருக்கும் கட்சுக்குள்ளேயே போரானது முற்றியது. அச்சமயத்தில் அதிமுகவினர் தமிழிசை மீது மதிப்பு வைத்திருந்தனர். இதனால்  அவரை எடப்பாடி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.