திமுக கூட்டணியை கை கழுவ பார்க்கும் காங்கிரஸ்.. விஜய் பக்கம் திரும்பும் ராகுல் காந்தி!!

Photo of author

By Rupa

திமுக கூட்டணியை கை கழுவ பார்க்கும் காங்கிரஸ்.. விஜய் பக்கம் திரும்பும் ராகுல் காந்தி!!

Rupa

Congress will wash its hands of DMK alliance..Rahul Gandhi will turn to Vijay!!

TVK: விஜய் கட்சி தொடங்கி மாநாட்டின் மூலம் தனக்கு எவ்வளவு பெரிய பெரும்பான்மையான ஆதரவு உள்ளது என்பதை மாற்றுக் கட்சியினருக்கு காட்டினார். ஆரம்ப கட்டத்தில் இவரை வரவேற்க பல கட்சிகள் முன் வந்தாலும் தற்போதைய சூழலில் கூட்டணியின்றி தனித்து தான் நிர்கிறார். முதலில் திமுகவின் கூட்டணி கலைக்க முயற்சித்த விஜய், முதலில் இவருக்கு சாதகமாக அமைந்தாலும் ஆளும் கட்சியின் சாமர்த்தியத்தால் பலம் பெற்று விட்டது.

இதையடுத்து அதிமுகவின் பக்கம் திரும்பிய விஜய் தொகுதி பிரிவு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கண்டிஷன்கள் போட்டதால் எடப்பாடி பின் வாங்கினார். தற்சமயம் என்ன செய்வதென்று குழம்பும் விஜய், காங்கிரஸ் பக்கம் திசை திரும்பியுள்ளார். ஆரம்ப கட்டத்திலிருந்தே காங்கிரஸானது திமுக மீது சற்று அதிருப்தியில் தான் இருந்தது. இதன் வெளிப்பாட்டை அதன் நிர்வாகிகளான செல்வப்பெருந்தகை  உள்ளிட்டோர் பேசுவதன் மூலம் நன்றாகவே அறிய முடிந்தது.

இதனை வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் எண்ணுகிறார். அந்த வகையில் திமுகவை விட்டுவிட்டு எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேற்கொண்டு இது ரீதியாக ராகுல் காந்தியை சந்திக்க உள்ளாராம். அதிமுக தனது கூட்டணிக்காக பாஜக மேலிடத்தை சந்தித்தது போல் தற்பொழுது விஜய் காங்கிரஸ்மேலிடத்தை சந்திக்க செல்வதாக கூறுகின்றனர். இவர்கள் கூட்டணி மட்டும் உறுதியாகும் பட்சத்தில் திமுக தோழமைக் கட்சிகள் என கூறும் கூட்டணிகள் சுக்குநூறாக உடைய கூடும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.