இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கும்கி. திரைப்படமானது வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் உள்ள பாடல்களும் இன்றுவரையில் மக்களிடையே ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ” சொய் சொய்” பாடல் பாடிய கிராமத்து பெண் குறித்த விவரங்களும் அவருக்கு இந்த பாடல் பாட கிடைத்த வாய்ப்பு குறித்த விவரங்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.
தன் கணவரின் உடைய கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த கிராமத்து பெண் தான் மகிழினி மணிமாறன். கச்சேரிகளில் பாடும் பொழுது பெண்களுக்கான பாடல்களை அதிலும் கருத்துள்ள பாடல்களை பாடுவதில் சிறந்தவராக விளங்கி வந்துள்ளார். இவரது திறமையை கண்ட தபேலா வாசிக்கக் கூடிய ஒருவர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்பு போராடி 5 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். அந்த வாய்ப்பு குறித்து அவர் தெரிவிக்கும் பொழுது நீண்ட நாட்களாக வாய்ப்பு தேடி அலைந்ததாகவும் ஒரு நாள் டி இமான் சாரிடமிருந்து தனக்கு பாடுவதற்கு அழைப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக கச்சேரிகளில் பாடுவதற்கும் சினிமாவில் பாடல்களை பாடுவதற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசங்கள் இருந்ததாகவும் இந்த ஒரு பாடலுக்காகவே தான் இலங்கை, அமெரிக்கா என பல நாடுகளுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இப்பொழுதெல்லாம் கச்சேரிகளுக்கு செல்லும் பொழுது அங்கு இந்த பாடல் மட்டுமே தன்னை பாட வைப்பதாகவும் அதிலும் இந்த ஒரு பாடலை 3 முறையாவது பாட வைத்து விடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நான் பாடிய பாடல் இப்பொழுது டிரண்டாகி வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ஒரு தாய் என்னிடம் என்னுடைய பாடல் குறித்து சொல்லும் பொழுது முன்பெல்லாம் குழந்தைக்கு நிலாவை காட்டி தான் சோறு ஊட்டுவேன் என்றும் இப்பொழுதெல்லாம் உங்களுடைய பாடலை போட்டு தான் என் குழந்தைக்கு சோறு ஊட்டுகிறேன் என சொல்லும் பொழுது மகிழ்ச்சியின் அளவு குறிப்பிட முடியாத அளவாக இருந்தது என தெரிவிக்கிறார்.