நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..

Photo of author

By அசோக்

நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..

அசோக்

eps

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளோடு பாஜகவும் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என பாஜக கருதுகிறது.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிச்சாமி அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று இரவு சென்னை வந்த அமித்ஷா நாளை தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்நிலையில், நாளை அதிமுக – பாஜக கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதிமுகவுக்கு எவ்வளவு தொகுதிகள் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது நாளை காலை பேசி முடிவெடுக்கப்பட்டு உறுதி செய்யப்படும் எனவும் அது முடிந்தவுடன் கூட்டணியை அறிவிப்பார்கள் என்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 5 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை என்றாலும் யாரும் சொந்த ஊருக்கு போகமல் சென்னையிலும் இருக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகளை அறிவுறுத்தியிருக்கிறார். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி, ஆர்.பி. உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், செங்கோட்டையனுக்கு எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.