BJP: அரசியல் வட்டாரத்தில் இன்றைய ஹாட் டாப்பிக்கே பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியதுதான். ராமதாஸ் தனது மகள் வழி பேரனை பதவி அமர்த்த வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். ஆனால் அன்புமணிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை. இதனால் தான் இருவருக்கும் பொது மேடையிலேயே வார்த்தை போரானது முற்றியது. அதேபோல நான் தான் நிறுவனர் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியே போங்கள் என்று காட்டமாக ராமதாஸ் கூறிவிட்டார்.
இவர் அப்படி கூறியது அன்புமணிக்கு தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உடனடியாக இவரும் பதிலடி கொடுக்கும் விதத்தில், பனையூரில் புதிய அலுவலகம் திறந்து உள்ளேன் அங்கே வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறினார். இவர்களின் இந்த போரானது ஓரிரு தினங்களில் முடிவுக்கு வந்தது. சுமூகமாக கட்சி செல்கிறது. உட்கட்சி மோதல் என்பது எதுவுமில்லை என்ற நிலையில் தான் ராமதாஸ் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்த கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத பதிலளித்துள்ளார். இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை, இதனை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் இணைந்து நல்ல முடிவை எடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். எப்பொழுதும் முன்னுக்கு பின்னான முரண்பாடான கருத்தை தெரிவிக்கும் அண்ணாமலை இம்முறை யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறியுள்ளார் .
இதே போல தான் அதிமுக விவகாரத்தில் வாய் திறந்ததால் பதவி கூட தக்க வைக்க முடியவில்லை. அதன் உள் அடியை பார்த்த அண்ணாமலை, தனது கூட்டணி கட்சி குறித்து கேள்வி கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அவர்களுக்கு சாதகமாகவே பதிலளித்துள்ளார்.