BJP: தமிழக பாஜக தலைமையை மாற்றுவது உறுதி என அண்ணாமலையே கூறிய நிலையில் அந்த ரேசில் என்னுடைய பெயர் கிடையாது என்றும் நேரடியாகவே சொல்லிவிட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்பதில் பல குழப்பங்கள் நிலவியது. குறிப்பாக நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதீ சீனிவாசன் தற்பொழுது ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் டெல்லி மேலிடம் அண்ணாமலையை போன்று இளம் வயதில் கட்சியை எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்க நபரை தேடுகிறதாம்.
மற்றொரு பக்கம் கூட்டணி கட்சிக்கு ஆதரவாகவும் மக்கள் அடையாளம் காணும் நபராக இருக்க வேண்டுமென்றும் யோசிக்கிறார்களாம். இளம் தலைவர் வேண்டுமென்றால் கட்டாயம் ஆனந்தன் அய்யாசாமியை தான் தேர்வு செய்ய வேண்டும். இதுவே மக்கள் அறிந்த முகம் வேண்டுமென்றால் நயினார் நாகேந்திரன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் இவர்களில் யாரையேனும் தேர்வு செய்ய வேண்டும். இது குறித்த அப்டேட்கள் தினசரி வெளிவரும் நிலையில் இன்று பாஜக தலைமை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேற்கொண்டு இது குறித்த விருப்ப மனு தாக்கலானது நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் வேட்பு மனுவை கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். தற்போது வரை அனைவரும் ஒரு யூகத்தில் இவர் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறிய நிலையில். நாளை வேட்பு மனு அளிக்கும் போதே யாருக்கு யார் உடன் போட்டி?? யார் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.