Breaking News, Cinema

தன்னைப் பெற்ற தாய்க்கும்.. பாட்டு கற்றுக் கொடுத்த தாய்க்கும் உடல் நலம் சரியில்லை!! மனமுடைந்து பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!!

Photo of author

By Gayathri

கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தன்னை பெற்றெடுத்த அன்னைக்கு உடல் நிலை சரியில்லை என்றும் தனக்கு பாடலை கற்றுக் கொடுத்த தாயாருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை என மனமுடைந்து பதிவிட்டு இருப்பது வைரமுத்துவின் ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது.

சிறந்த பின்னணி பாடசியாக விளங்கிய பி சுசீலா அவர்களுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்ட அடிக்கடி மருத்துவமனை சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த தாயார் பி சுசீலா என்பதால் தன்னுடைய இரு தாயாரும் உடல் நலமில்லாமல் இருப்பதாக மனம் உருகி பதிவிட்டு இருக்கிறார் வைரமுத்து அவர்கள்.

கவிஞர் வைரமுத்துவின் X தள பதிவு :-

இருபெரும் தாயர்க்கு

உடல் நலமில்லை

ஒருவர்

எனக்குப் பாலூட்டிய தாய்

அங்கம்மாள் ராமசாமி

இன்னொருவர்

எனக்குப் பாட்டூட்டிய தாய்

பி.சுசீலா

நாட்டார் தமிழைக்

கற்பித்தவர் பெற்றதாய்;

பாட்டார் தமிழைக்

கற்பித்தவர் உற்றதாய்

தாங்குதுணை இல்லாமல்

தன்னியக்கம் இல்லை

இருவர்க்கும்

சற்றொப்பச் சமவயதுகொண்ட

தாய்மார்கள்

இருவர்க்குமே வாழ்வு

சர்க்கரையால் கசக்கிறது

நான் பாசத்தோடு படைக்கும்

சத்துமாவுக் கஞ்சிதான்

இருவர்க்கும் ஆகாரம்

இருவரையும்

மாறிமாறி நலம்கேட்கிறேன்

அந்த நான்கு கரங்களையும்

பற்றும்பொழுது

நடுங்குகின்றன

என்னிரு கரங்களும்

இருபெரும் தாயரும்

நலமுற வேண்டும்;

நெடுங்காலம்

நீடு வாழவேண்டும்

“பறவை பறந்துசெல்ல

விடுவேனா – அந்தப்

பரம்பொருள் வந்தாலும் தருவேனா?

உன்னை அழைத்துச்செல்ல

எண்ணும் தலைவனிடம்

என்னையே நான்தர மறுப்பேனா?”

ஒருவர் பாடிய பாடல்

இருவர்க்கும் காணிக்கை

அன்னையர் இருவரும்

ஆண்டுபல நீண்டுவாழ

வேண்டுமென்று

வேண்டுகின்றேன்

யாண்டுமுள்ள நண்பர்களை

என தன்னுடைய இரண்டு தாயாரும் நல்லபடியாக குணமாகி வரவேண்டும் என கடவுளை பிரார்த்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

SBI ஏடிஎம் பயனாளிகளுக்கு புதிய அளவுகோல்களை விதித்த வங்கி!! இனிமே இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

பணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!