வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?…

Photo of author

By அசோக்

வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?…

அசோக்

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்கிற கேள்விதான் கடந்த பல நாட்களாகவே ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே முட்டிகொண்டதால் கோபப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு காரணம் அதிமுக தலைவர்கள் பற்றி மிகவும் அவதூறாக அண்ணாமலை விமர்சித்தார்.

அதேநேரம், பாஜகவும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறது. அதோடு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற எண்ணமும் பாஜகவுக்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது அண்ணாமலையை பதவியிலிருந்து தூக்க வேண்டும் என அமித்ஷாவிடம் பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்பட்டது. ஏனெனில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை அண்ணாமலை விரும்பவில்லை. அதோடு, பழனிச்சாமியின் தலையின் கீழ் கூட்டணி அமைத்தால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

எனவே, தமிழக புதிய பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி பாஜக வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் பட்டியலில் இருந்தாலும் முதலிடத்தில் இருப்பது நயினார் நாகேந்திரன் என சொல்கிறார்கள். சமீபத்தில் கூட அவர் டெல்லி சென்று பாஜக மேலிடத்தை சந்தித்துவிட்டு வந்தார். எனவே, அவரையே தமிழக பாஜக தலைவராக நியமிக்க நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுகிறது.

nainar

இதை பற்றி விவாதிக்கவும், கூட்டணி பற்றி முடிவெடுக்கவும் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வருகிறார் அமித்ஷா. நாளை காலை முதல் மாலை 4 மணி வரை அவர் கட்சி நிர்வாகிகளுன் ஆலோசனை செய்கிறார். இந்நிலையில், வருகிற 12ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார் என பாஜக மேலிடம் அறிவிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது.