சசிகலா சிறைக்கு செல்லும் முன் கூவத்தூர் விடுதில் அவரின் காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் வந்தது. பாஜக மேலிடம் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினார் பழனிச்சாமி. பாஜக – அதிமுக கூட்டணியும் உருவானது. அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அடிமைகள் என விமர்சனம் செய்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலுமே அதிமுக தோல்வி அடைந்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க ‘இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்தார் பழனிச்சாமி. ஆனால், இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதுவும், இந்த கூட்டணியில் பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூட அமித்ஷா சொல்லவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் அதுபற்றி யோசிப்போம் என்றே சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் இறுதி அத்தியாயத்தை எழுதிவிட்டார் பழனிச்சாமி.. எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு, ஜெயலலிதாவால் நிலைநிறுத்தப்பட்ட கட்சி அதிமுக. திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து பலமுறை ஆட்சியை பிடித்தது வரலாறு. சூழ்நிலை காரணமாக ஒருமுறை தவறுசெய்து பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். இனி எந்த காலத்திலும் சேரமாட்டோம என்றார் எடப்பாடி.
தற்போது மீண்டும் அதே தவறு. இந்த சூழ்நிலைக்கு பெயர் ‘ED ரெய்டு’ என்பது சாமான்யரும் அறிந்த விஷயம். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் எனத்தெரிந்தும், சுயநலத்திற்காக.. மொத்தமாக கட்சியை அடகு வைத்து விட்டார். தான்தோன்றித்தனமாக.. பெரியாருக்கு எதிராகவும், பெண்களை கொச்சையாகவும் பேசி.. பாஜகவின் விசுவாசியாக இருந்ததால் நாம் தமிழர் கூடாரத்தை காலி செய்துவிட்டு வெளியேறினர் தொண்டர்கள். தற்போது அதேநிலை அதிமுகவிற்கு வந்துள்ளது.
நேற்று நடந்த பிரெஸ்மீட்டில் அமித் ஷா மட்டுமே பேச.. எடப்பாடி கைகட்டி வாய் மூடி இருந்தார். இது இந்த தனிமனிநருக்கோ அல்லது அதிமுக எனும் பேரியக்கத்திற்கோ நேர்ந்த அவமானம் மட்டுமல்ல. தமிழர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்படும் கோழைக்கு இல்லம் எதற்கு என எம்.ஜி.ஆர் பாடியது இதற்குத்தான். அதிமுகவின் இறுதிப்பயணத்தை காவிக்கொடி அசைத்து துவக்கியுள்ளார் எடப்பாடி’ என பதிவிட்டிருக்கிறார். இதோடு ஒத்த கருத்தையே பொதுமக்கள் பலருமே தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் சொல்லி வருகிறார்கள்.
பழனிச்சாமி எடுத்த முடிவு சரியா?. தவறா?.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!..