தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக விளங்கக்கூடிய சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின் பல படங்களில் நடித்த வெற்றி கொடுத்த இவர், இரண்டு படங்களில் மட்டும் வில்லியாக தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது சினிமா துறையில் மார்க்கெட்டில் அந்த நடிகையாகவும் தொலைக்காட்சி ஒன்றிய நடுவராகவும் இவர் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் இவர் ஏற்கனவே திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகி 15 வயது மதிக்கத்தக்க மகளுடன் இருக்கக்கூடிய ஒருவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி சரத்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவர் அவர். நடிகை வரலட்சுமி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த மிகப்பெரிய நடிகையாக இருந்து வந்தவர்.
இப்படிப்பட்ட சூழலில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியிருப்பதாவது :-
தன்னால் தன்னுடைய கணவரை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை என்றும் எதற்கு எடுத்தாலும் என்னுடைய அப்பா மற்றும் அம்மாவிடம் என்னை பற்றி வாட்ஸ் அப் வாய்ஸ் நோட்டில் புகார் தெரிவித்துக் கொண்டே இருப்பதாகவும் இவர் செய்யக்கூடிய செயலானது சின்ன குழந்தைகள் போல இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய பெற்றோரும் அவர் செய்யக்கூடிய கம்ப்ளைன்ட் களை மதித்து என்னை திட்டிக் கொண்டே இருக்கின்றனர் அவர்கள் இருவரும் என் கணவருக்கு மட்டுமே சப்போர்ட் செய்கின்றனர் என புலம்பி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.