PMK: கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதற்கு முக்கிய காரணமாக அப்பா மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு தான் என்று பலரும் கூறினர். சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் மகள் வழி பேரனை இளைஞர் அணித் தலைவராக நியமிப்பதில் இருவருக்கும் மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது. அக்கணமே பாமக நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் கட்சி விட்டு வெளியே செல்லுங்கள் என தெரிவித்தார்.
இதற்கு ஏற்றார் போல் அன்புமணியும், பனையூரில் புதிய அலுவலகம் திறந்துள்ளேன் யாராக இருந்தாலும் அங்கு வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறினார். இவர்கள் இருவரையும் கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர். தற்போது மீண்டும் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இச்சமயம் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கும் அளவிற்கு மோதல் போக்கு உச்சிக்கு சென்று விட்டது. இப்படி இருக்கையில் ராமதாஸ் அவர்களை காண பல்வேறு நிர்வாகிகள் தைலாபுரம் சென்று வருகின்றனர்.
ஆனால் ராமதாஸ் யாரையும் சந்திப்பதில்லை என்று ஒரேடியாக மருத்து வருகிறாராம். இது ரீதியாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம், குறிப்பாக தலைமை பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியது தொடர்பாக பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் கௌரவ தலைவரான ஜிகே மணி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியின் ஒற்றுமைக்காக இருவரும் இணைய வேண்டும். மேற்கொண்டு பாமக ஒரு குடும்பம் இதில் தற்பொழுது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் இந்த சலசலப்பு சரியாகிவிடும் மேற்கொண்டு நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார். கட்சி தலைமையிலிருந்து நீக்கியது குறித்து அன்புமணியிடம் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.