ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் இந்த முறை கூட்டணி வைக்கும் போது மிகவும் விவரமாக பல நிபந்தனைகளை போட்டுள்ளதாம். இவர்களின் முதல் நிபந்தனையாக இருந்ததே அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்பதுதான். அதனை பாஜக நிறைவேற்றி விட்டது, இதற்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை போட்டுள்ளதாம். அதில் முதலாவதாக, எங்கள் உட்கட்சி பிரச்சனையில் தலையிடக்கூடாது யாரையும் கூட்டு சேர்க்க கோரி வலியுறுத்தவும் கூடாது.
இரண்டாவதாக திமுக மற்றும் பாஜக ரகசிய பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் அது இல்லை என்று நிரூபணம் செய்ய வேண்டும். மூன்றாவதாக திமுக அமைச்சர்கள் மீது பாஜக ED மூலம் நடவடிக்கை எடுத்து நெருக்கடி கொடுக்க வேண்டும். நான்காவதாக, அதிமுக நிர்வாகிகள் மீதுள்ள வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல் காலம் தாழ்த்த வேண்டும். ஐந்தாவதாக, நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவெடுப்போம் அதுவும் அரசியல் சூழல் பொறுத்து எடுக்கப்படும் இதில் பாஜக கட்டாயப்படுத்தக்கூடாது.
ஆறாவதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எங்கள் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவராக தான் இருக்க வேண்டும். ஏழாவதாக, தேர்தலில் உங்களுக்கு எத்தனை இடம் வேண்டும் என்பதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம் இதை தவிர்த்து கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை தான் வாங்கிக் கொள்ள வேண்டும். எட்டாவதாக, எந்தெந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று வரிசை பட்டியல் தரவுகளில் அதில் 50 சதவீதம் மட்டுமே பாஜக கேட்டு வாங்கிக் கொள்ள முடியும்.
மீதமுள்ள 50 சதவீதம் நாங்கள் தரும் தொகுதிகளை தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்பதாவதாக பாஜகவின் என்டியே கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையாக அறிவிக்க வேண்டும். பத்தாதாக, வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் அதிமுக போட்டியிட சம்மதிக்க வேண்டும். இவையனைத்திற்கும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி அக்ரீமெண்ட் போட்டுள்ளார். பாஜகவும் மறுக்க முடியாமல் ஒப்புதல் அளித்துள்ளது. நாளடைவில் இது ரீதியான அறிவிப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவரும் என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.