இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் பந்தாடிய சோகத்தில் சீனா கப்சிப்.!!

Photo of author

By Jayachandiran

சீன செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக தொடர் சிக்கல் ஏற்பட்டு வந்தது. எல்லை பகுதியில் அடிக்கடி சீன இராணுவ ஊடுறுவல் நடப்பதால் இந்திய ராணுவமும் அதனை எச்சரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 15 ஆம் தேதி இருநாட்டு இராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு வருத்தம் கொண்ட சீனா, இதனால் 45 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் சீன செயலிகளை தடை செய்ய அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அதிபர் டிரம்பிற்கு முன்னதாக வெளியிட விரும்பவில்லை. ஆனால், சீன செயலிகளை தடை செய்வது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். டிக்டாக் பயன்படுத்துவதில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.