ADMK BJP: அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக பாஜக இணைந்தது குறித்து தான் அனைத்து கட்சியினரின் பேச்சாக உள்ளது. இதில் பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தான் பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாம். ஆனால் அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் இதில் மறைமுக சூழ்ச்சி உள்ளதாக கூறுகின்றனர். பாஜக தனது ஆதரவளிக்காத மாநிலங்களை தன்வசப்படுத்தி ஆளுமை செய்ய வேண்டும் என்பதை நினைக்கிறதாம். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இது ரீதியாக மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு ஆட்சி மாற்றமும் நிகழாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஏன் இந்தியாவுக்கே அது தெரியும்.
அதேபோல பாஜகவின் முக்கிய நோக்கம் அதிமுகவை மீண்டும் தமிழகத்தில் காலூன்ற வைப்பதெல்லாம் கிடையாது, அதற்கு பதிலாக கூட்டணி கட்சியை கைக்குள் வைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை கொண்டு வருவதற்காகத்தான் இப்படி செய்கிறது. இதற்குப் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பாஜக இணைந்திருப்பது நிதர்சனமான உண்மை. அதன் சூழ்ச்சி காரணமாக தான் இந்த மாநில பதவி நியமனம் நாடகமெல்லாம், மேற்கொண்டு சூழ்ச்சி தெரியவரும் நிலையில் அனைவரின் குட்டும் வெளிப்படும்.
தமக்கு ஆதரவளிக்காத மாநிலங்களில் ஆதரவை திரட்டவே இப்படி செய்து வருகின்றனர். அதிகாரத்தில் உட்கார எந்த வகையான கீழ்த்தர செயலையும் செய்ய பாஜக தயாராக உள்ளது. அதன்படி தான் தற்பொழுது அண்ணாமலை பதவியானது பறிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.