தமிழ் சினிமா துறையில் முக்கிய இயக்குனரும் பல நடிகர்களை திரையில் அறிமுகப்படுத்திய வருமான பாரதிராஜா அவரின் மகன் மனோஜ் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாரதிராஜாவை யாராலும் தேற்ற முடியவில்லை. ஒருபுறம் கங்கை அமரன் சென்று ஆறுதல் கூற தன்னுடைய பாடல்களை பாடி அவர் மனதை மாற்ற முயன்றார். மற்றொரு நாள் இளையராஜா சென்று ஆறுதல் கூற முடியாமல் அமைதியாக இருந்து திரும்பிவிட்டார்.
தன்னுடைய மகனை நடிகனாக திரையுலகில் மின்ன செய்ய ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அத நடைபெறாமல் போனது. தந்தை போன்றே நல்ல இயக்குனராக மாற நினைத்த மனோஜ் அவர்களுக்கும் அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதய பாதிப்பை கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். தன் மகனினுடைய உயிரிழப்பிற்கு பின் யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் பாரதிராஜா பித்து பிடித்தவர் போல தனிமையே அதிக அளவில் சார்ந்திருந்தார்.
பாரதிராஜா குறித்து அவருடைய சகோதரர் தெரிவித்திருப்பதாவது :-
என்னுடைய அண்ணன் பாரதிராஜா அவர்களை மனோஜ் ரொம்பவே நன்றாக பார்த்துக் கொண்டார் என்றும் அவர் இறந்த பின்பு அவரிடத்தில் இருந்து யாரும் அண்ணனை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். நேற்று கூட காலையில இருந்து அவர் சாப்பிடவில்லை என்றும் குழந்தைகள் சாப்பாட்டை எடுத்து சென்று சாப்பிட்டு ஆக வேண்டும் என ஓட்டி விட்ட பின்பு தான் பாரதிராஜா சாப்பாட்டை சாப்பிட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார். தன் மகனுக்குப் பின்பு பேத்திகளின் மீது தான் அதிக பாசமாக இருக்கிறார் என்றும் பேத்திகளினுடைய அன்பில் அடிமைகளாகவே பாரதிராஜா மாறிவிட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக தன்னால் யாருக்காவது ஏதேனும் தொந்தரவு ஏற்படுமோ என்ற எண்ணத்தில் முழுவதுமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள நினைத்த பாரதிராஜா கடற்கரை பங்களாவில் தனிமையில் இருந்து வருவதாகவும் பாரதிராஜாவின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்.