சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரதபெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் தங்களுக்குள் அது போன்ற முடிவு எதுவும் இல்லை என்பது போல ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அவர்களுடைய மகள் என அனைவரும் ஒன்றாக வெளியே செல்லக்கூடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு திருமணம் ஆன பொழுது அவருடைய மாமியார் அவரை வரவேற்ற வீடியோ இணையத்தில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
நான் மீண்டும் ஒரு அழகான, பண்புடன் கூடிய, மரியாதை மிக்க புன்னகையுள்ள பெண்ணின் மாமியாராக இருக்கப் போகிறேன். நம் குடும்பத்தில் வரவேற்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேன் என ஐஸ்வர்யா ராய் அவர்களின் தன்னுடைய இல்லத்துக்கு மருமகளாக ஜெயா பச்சன் அன்போடு அழைத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் அழைக்கும் பொழுது ஐஸ்வர்யா ராய் அவர்களின் கண்கள் இருந்து ஆனந்த கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ ரசிகர்களால் தற்பொழுது டிரண்டாக்கப்பட்டு வருகிறது. எனினும் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் விவாகரத்து என்றும் பேச்சு எழ காரணமாக அவருடைய மாமியார் இருந்திருப்பது தற்பொழுது வெளிப்படையாகியுள்ளது.