பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ அப்போது முதல் இப்போதுவரை இதைத்தான் செய்து வருகிறார்கள்.
கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் காலூன்ற பாஜக எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. இப்போது 8 சதவீத ஓட்டுகள் வரை வந்துவிட்டார்கள். சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. பொதுவாக கூட்டணி கட்சி தலைவர்தான் கூட்டணி பற்றி அறிவிப்பார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருக்க அமித்ஷாவே அறிவித்தார்.
அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருந்தார்.
அதாவது, அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் எனவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதன் அர்த்தம் பாஜகவுடன் கூட்டணி போடும் மற்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கும். அதோடு, ஆட்சி அமைப்பது பற்றி தேர்தல் முடிவுக்கு பின் ஆலோசிக்கப்படும் எனவும் கவனமாக சொல்லி இருக்கிறார். இதன் அர்த்தம் இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள்.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருக்கிறார்.