மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

Photo of author

By Anand

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

Anand

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவிலாகும். இந்நிலையில் மாற்றும் சமுதாயத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டதால் அங்கே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கோவில் சீல வைத்து மூடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு பட்டியலின மக்களின் கோவிலுக்குள் நுழையும் உரிமையை பற்றியும், மற்றொரு தரப்பினர் இது எங்கள் குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவில் என்றும் இதில் எப்படி அரசு தலையிட முடியும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் மார்ச் 2024 ல், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. தினசரி பூஜைகள் நடைபெற வேண்டும், ஆனால் தற்போதைக்கு பொதுமக்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என தெரிவித்தது. பூசாரி ஒருவருக்கே கோவில் நுழைவு அனுமதி வழங்கப்பட்டு, பூஜைகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் பட்டியலின மக்கள் வழிபட நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதே சமயம் தங்களுக்கு சொந்தமான குல தெய்வக் கோவிலில் தங்கள் பாரம்பரியத்தை மீறி கோவிலுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத மாற்று சமுதாய மக்களை அனுமதித்ததை எதிர்த்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.