ADMK BJP: தமிழ்நாட்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அமித்ஷா சென்னைக்கு வருகை புரிந்த போது இவர்கள் கூட்டணியை உறுதி செய்து, மத்தியில் ஆட்சிக்கு மோடி மாநில ஆட்சிக்கு எடப்பாடி எனக் கூறியிருந்தார். இதை வைத்து பல ஊடகங்கள் 2026 யில் அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி முறையை மேற்கொள்ளும் என்று கூறிவந்தது.
இது ரீதியாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பிய போது, கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார். திமுகவை வீழ்த்த கூட்டணி வைத்துக்கொண்டமே தவிர, கூட்டணி ஆட்சி செய்ய மாட்டோம் என தெரிவித்தார். இதே போலவே அக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், ஒருபோதும் தமிழகத்தில் கூட்டணி முறையில் ஆட்சி செய்ய மாட்டோம் இனி யாரும் அது போல் செய்யவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.
இப்படி அதிமுக கூட்டணி ஆட்சி இல்லை என தெரிவிக்கவே இது குறித்து பாஜக மாநில தலைவரிடம் கேள்வி எழுப்பினர். அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியது பாஜக தலைமை தான். மேற்கொண்டு அது குறித்த முடிவுகளையும் மேலிடமே எடுக்கும் என தெரிவித்தார். இப்படி அதிமுகவும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி ஆட்சி குறித்து பேசி வந்ததால் மீண்டும் விரிசல் உண்டாகும் என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
அதனை உணர்ந்த எடப்பாடி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். இனிவரும் நாட்களில் கட்சி நிலைப்பாடு மற்றும் அதன் செயல்முறை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பத்திரிக்கை ஊடகங்களுக்கு யாரும் சம்பந்தமில்லாமல் பேட்டியளிக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாஜக மேலிடம் தான்.
என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியும். அமித்ஷா மற்றும் இபிஎஸ் இது குறித்து பேசி கொள்வார்கள், அவர்களை தவிர்த்து கூட்டணி குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என எச்சரித்துள்ளார். நிர்வாகிகளால் ஏதேனும் கட்சிக்கு வில்லங்கம் உருவாகிவிடும் என்பதாலேயே அதிமுக மற்றும் பாஜக தலைமை முன்கூட்டியே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை எச்சரித்துள்ளது.