ADMK: பாஜக அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஆரம்பத்தில் ஒத்து வரவில்லை என்றாலும் தற்சமயம் மனம் மாறியுள்ளார். குறிப்பாக தினகரன் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். இவ்வாறு எடப்பாடியின் செயலைக் கண்டு மாற்று கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் ஓபிஎஸ் யிடம் செய்தியாளர்கள் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதாவது வருடம் தோறும் ஓபிஎஸ் ஆர்கே ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் வழக்கம்போல் இந்த வருடமும் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடித்துவிட்டு திரும்பும் போது செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஐ சூழ்ந்து கொண்டனர். மேற்கொண்டு அவரிடம் கேள்வி எழுப்பினர். அதிலும், அதிமுக பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?? அதிமுக பாஜக கூட்டணி வெற்றியடையுமா என கேட்டுள்ளனர்.
இவ்வாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சிறிதும் கூட யோசிக்காமல் பன்னீர்செல்வம் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு விடுமுறை எனக் கூறிவிட்டு புனித வெள்ளி வாழ்த்து சொல்லி புறப்பட்டு விட்டார். இப்படி அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து வாய் திறக்காததற்கு முக்கிய காரணம் இருக்குமென கூறுகின்றனர். சமீபகாலமாகவே பாஜக கூட்டணி வலுப்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில் ஓபிஎஸ் சசிகலா தினகரன் மீண்டும் இணைய வேண்டுமென்று அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி மனதும் தற்போது மாறி உள்ளதால் அவர்கள் கூறும் வரை எந்த ஒரு பதிலும் கூறக்கூடாது என்ற தீர்க்கமான முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.