ADMK : அதிமுக கட்சிக்குள்ளே உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. அதன்படி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும், அத்திக்கடவு பாராட்டு விழா நடத்தியதிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி பிரச்சனையில் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்திய போது இவருக்கு பின்வந்த மாஜி அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட செங்கோட்டையனுக்கு தரவில்லை. இதனால் அதிமுக சார்பாக நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தார்.
அந்த வகையில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக நடைபெற்ற விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை. இப்படி இவர்களுக்குள் போர் முற்றிய நிலையில் அதிமுகவே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் டெல்லி சென்று திடீரென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை தனியாக சந்தித்து வந்தார். தொடர்ந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகி ஓபிஎஸ் உடன் இணையப் போகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து இவர்களை மூத்த நிர்வாகிகள் சமரசம் செய்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணியும் நேரம் பார்த்து சேர்ந்துவிட்டது.
இன்று ஈரோட்டில் அதிமுக சார்பாக அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் சைவ வைணவ இனம் குறித்து அவதூறாக பேசியது ரீதியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எடப்பாடி ஆட்சி அமைக்கவே என்று முழக்கம் விட்டனர். ஆனால் செங்கோட்டையன் வாய்மூடி அமைதியாகவே இருந்தார். அதேபோல செய்தியாளர்களிடம் பேசுகயிலும், மறைந்த முதல்வர்கள் ஆன எம் ஜி ஆர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தனர். அவர்கள் வழியில் தற்பொழுது எதிர் கட்சி தலைவரும் நல்லாட்சி அமைத்தார். அந்த நல்லாட்சி மீண்டும் வரவேண்டும்.
ஒரு கட்சி அமைச்சர் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேச வேண்டும் பெண்களை இழிவு படுத்தி பொன்மொழி பேசி உள்ளார். இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அமைச்சராகும்போது உறுதிமொழி எடுத்ததெல்லாம் எண்ணானது?? அதையும் மீறி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அமைச்சர் பேசியதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இனிமேல் இதுபோல் பேசாமல் இருக்க மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்டாயம் நடைபெறும். இது ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தான் எடுப்பார் எனக் கூறியுள்ளார். இவர் அவர் பேட்டியளிக்கையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி என்று பெயரை குறிப்பிடவில்லை. அந்தவகையில் இவர்களின் மோதல் போக்கு முழுமையாக முடிந்த பாடில்லை.