வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

Divya

நம் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள தவறுவதால் இளம் வயதிலேயே வெடிப்புகள் உருவாகி அழகை கெடுத்துவிடும்.வறண்ட கால் பாதங்களில் அதிக வெடிப்பு வெடிப்பு உண்டாகி வலி ஏற்படுகிறது.கால் பாதங்களில் வெடிப்பு வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

இது தவிர உடல் எடை அதிகரிப்பு,நீர்சத்து குறைபாடு,தொற்று,உடலுக்கு போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணத்தினால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்பு பாதிப்பில் இருந்து மீண்டு அழகான மிருதுவானதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறையை பின்பற்றலாம்.

கால் பாத வெடிப்பை குணப்படுத்திக் கொள்ள டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை தினமும் முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் உங்கள் பாத வெடிப்பு நீங்கிவிடும்.

தீர்வு 01:

நல்லெண்ணெய்
மஞ்சள் தூள்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்து பாதங்கள் மீது தடவினால் வெடிப்பு நீங்கும்.இந்த எண்ணெய் கலவையை இரவில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 02:

தேங்காய் எண்ணெய்
வேப்பிலை
வேப்பம் பூ

ஒரு தேக்கரண்டி அளவு வேப்பிலை பொடி மற்றும் வேப்பம் பூ பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் நான்கு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் வேப்பிலை பொடி மற்றும் வேப்பம் பூ பொடியை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணெய் கலவையை ஆறவைத்து கால் பாதங்கள் மீது தடவினால் வெடிப்புகள் மறைந்துவிடும்.

தீர்வு 03:

மருதாணி இலை பொடி
மஞ்சள் தூள்

மருதாணி இலையை உலர்த்தி பொடித்து மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதில் சிறிது தண்ணீர் ஊற்றி குழைத்து கால் பாதங்கள் மீது தடவினால் வெடிப்பு குறையும்.