பாலிவுட் திரை உலக்கில் மிக முக்கிய இயக்குனராகவும் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய வருமாக்கா உள்ள அனுராக் பிராமணர்கள் பற்றி அவதூறாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா துறையில் இமைக்கா நொடிகள் மூலம் வெள்ளனாக அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் விஜயின் லியோ திரைப்படத்திலும் விஜயவர்களுக்கு நண்பராக இவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த மகாராஜா திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்ததோடு உலக அளவில் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுராக் ஏன் பிராமணர்களை பற்றி சர்ச்சையாக பேசினார் என்பது குறித்து விளக்கமாக காண்போம் :-
இயக்குனர் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்திருக்க கூடிய படம் தான் புலே. இந்த திரைப்படத்தில் சமூக சீர்திருத்தவாதிகள் ஆன ஜோதிரா புலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் ஜோதிராவ் பிறந்தநாள் ஆனா ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெளியிடப்பட முடிவெடுத்திருந்த நிலையில் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காரணம் இந்த திரைப்படத்தில் பிராமணர்கள் தரப்பில் பல்வேறு சர்ச்சை காட்சிகள் நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தெரிந்த அனுராக் கோபத்துடன் சமூக வலைதளத்தில் தணிக்கை வாரியத்தை திட்டி பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் சாதி அமைப்புகள் இல்லை என்றால் ஏன் பிராமினர்கள் கோபமடைய வேண்டும் என்றும் படத்தை தணிக்கை குழு வழங்கும் ஒப்புதலை தாண்டி ஒரு சாதிய குழு எப்படி முடிவு செய்ய முடியும் என்பது குறித்த பல கேள்விகளை கேட்டதோடு இங்கே மொத்த சிஸ்டமும் தவறாக உள்ளது என்றும் ஜாதி இல்லை என்றால் நீங்கள் எப்படி பிராமணர்களாக மாறினீர்கள் என்றும் கேள்வி எழுப்பு இருக்கிறார். முதலில் அனைவரும் ஜாதி உள்ளதா இல்லையா என முடிவு செய்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்ததோடு, ” நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் உனக்கென்ன பிரச்சனை ” என அவர் கேட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.