இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக்கலை திரைப்படத்தின் முதல் சிங்கிளானது நேற்று வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. அப்பொழுது பேசிய கமலஹாசன் அவர்கள் இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் தான் என கூறியது அங்கு இருந்தவர்களை ரசிக்கவும் சிந்திக்கவும் செய்தது.
நாயகன் திரைப்படத்திற்கு பெண் நடிகர் கமலஹாசனும் மணிரத்தினமும் பல ஆண்டுகள் கழித்து இணைந்து வேலை பார்க்கக் கூடிய படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கள் வெளியிட்ட விழா சென்னையில் நேற்று நடைபெற்ற பொழுது கமல் பேசியிருக்கக் கூடியத அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் என அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
நிகழ்ச்சிகள் பேசிய கமலஹாசன் கூறியிருப்பதாவது :-
இனி இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில்தான் பேசப்போவதாகவும் இது அரசியல் எல்லாம் இல்லை என்றும் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் இதுதான் தமிழனுடைய எதார்த்தம் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய நடிகர் கமலஹாசன், தமிழன் என்றுமே விருந்தோம்பலில் சிறந்து விளங்குவான் என்றும் 2000 ஆண்டுகளாக விருந்தோம்பலை நாம் சிறப்பாக செய்து வருகிறோம் என்றும் தெரிவித்ததோடு இன்று இந்த விழாவிற்கு வந்த இந்தியாவின் பல்வேறு செய்தியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைவரும் பான் இந்தியா திரைப்படத்தை எடுக்க விரும்புகின்றனர் என்றும் எந்த மொழியில் எடுக்கப்படுகிறது என்பது விஷயம் இல்லை எடுக்கக்கூடிய படமானது சிறந்த விளங்குகிறதா என்பது பான் இந்தியா திரைப்படத்திற்கான அடையாளம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு குறிப்பாக மணிரத்தினத்திற்கும் தனக்கும் இடையிலான உறவு எப்பேர்ப்பட்டது என்றும் அவர்களிடையில் 25 சதவிகிதம் மட்டுமே அவர்கள் நினைத்த காரியங்கள் தற்பொழுது நடந்து முடிந்திருப்பதாகவும் ஒரு படத்தில் இணைக்கிறார்கள் என்றால் அதனுடைய சிந்தனை அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது என்றும் ஆனால் மார்க்கெட்டின் நிலவரத்தை கருத்தில் கொண்டு தங்களுடைய கற்பனைகளை சுருக்கி கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.