PMK VSK: பாமகவின் மாநாடானது 12 ஆண்டுகள் கழித்து வரும் மே மாதம் 11-ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சித்திரை முழுநில மாநாடானது பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு நடைபெறுகிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இவர்களுக்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அரசியல் பூசலும் உள்ளது.
இதனிடையே பாமக கட்சிக்குள் அப்பா மகள் சண்டை இருக்கும் நிலையில் சித்திரை முழு நிலம் மாநாடு நடக்காமல் தடைபட்டு போகுமா என்ற கேள்வி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் அதனை மாநாட்டில் காட்டாமல் இதற்கு தலைவராக அன்புமணியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். தற்சமயம் இந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்த வர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவனுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். திருமாவும் அதனை பெற்றுக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கொண்டு மாநாட்டிற்கு திருமாவளவன் செல்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக் குறிதான். கடந்த முறை கட்சி ரீதியாக இல்லாமல் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில் திருமாவை கலந்து கொள்ள விடாமல் திமுக அழுத்தம் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்தும் ஒன்று. அப்படி இருக்கையில் கட்டாயம் வன்னியர் சங்கம் நடத்தும் மாநாட்டிற்கு இவர் செல்ல வாய்ப்பே இல்லை என கூறுகின்றனர்.