DMK: திமுக நிர்வாகிகள் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தத்தை தரும் வகையில் தான் பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி சைவ வைணவ இனத்தை குறிப்பிட்டு விலைமாத பெண்களை வைத்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவரது சொத்துக்குவிப்பு வழக்கில் கூட இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கையில் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட இது ரீதியாக விவாதம் செய்யப்பட்டு அமைச்சர்கள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் மிகவும் மரியாதையுடன் பேச வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இவர் ஒவ்வொரு முறையும் இதுபோல சர்ச்சை ஏற்படும் போது இத ரீதியாக அறிவுறுத்தும் நிலையில் அதனை அக்கட்சி நிர்வாகிகள் சிறிதும் கூட கண்டு கொள்வதில்லை.
அப்படித்தான் இன்று திமுக எம்பி கல்யாண சுந்தரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் குழந்தை பிறப்பு பற்றி பேசி உள்ளார். அதிலும் குழந்தை வேண்டுமென்றால் 10 மாதம் பொறுத்துதான் ஆக வேண்டும், உடனே கிடைக்க வேண்டும் என்றால் வேறு முறையில் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டுமே திருமணம் அன்று குழந்தையை பெற்றெடுக்க முடியும் என விமர்சனம் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கொள்ள திமுகவின் மேல் இடத்திற்கு இவ்வாறு எம்பி பேசியது அடுத்த கட்ட பிரஷரை உண்டாக்கியுள்ளது.