நடிகர் விஜயின் சச்சின் திரைப்படம் ஆனது தற்பொழுது தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இந்த நேரத்தில் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இயக்குனர் தானோ மற்றும் விஜய் இணைந்து எடுத்திருக்கக்கூடிய முடிவுகள் குறித்தும் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா விளக்கி இருக்கிறார்.
பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா தெரிவித்திருப்பதாவது :-
நடிகர் விஜய் அவர்களின் சமீபத்திய படங்கள் மிகப்பெரிய வெற்றியையோ, வசூலையோ செய்யவில்லை என்பதற்காகவும் தற்பொழுது நடிகர் அஜித் அவர்களின் குட் பேட் அக்லி திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி எந்த வித போட்டியும் இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருவதாலும் எதிர்பார்க்காத அளவு வசூலை எட்டி வருவதாலும் சச்சின் திரைப்படத்தை ரீலீஸ் செய்த நடிகர் அஜித் அவர்களின் திரைப்படமானது விஜய் படத்தின் வசூலை தாண்டி விடுமோ என்ற எண்ணத்தில் இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாக பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படம் வெளியிடக்கூடிய நடிகராக நடிகர் அஜித் விளங்கி வரக்கூடிய நிலையில் தற்போது அவரின் படம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் போட்டிக்கு வேறு படங்களும் இல்லாமல் திரையாக்கி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருவதோடு வசூலையும் குவித்து வருகிறது இந்த வசூலை குறைக்கும் நோக்கில் இது போன்ற ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சச்சின் திரைப்படம் ஆனது வெளியான காலத்திலேயே வெற்றி பெறாத திரைப்படம் ஆக தான் உள்ள நிலையில் அதனை மீண்டும் ஏன் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு இந்த திரைப்படம் ஓடக்கூடிய திரையரங்குகளில் டிக்கெட் ஹவுஸ் ஃபுல் என தெரிவிப்பது கூட நடிகர் விஜய் அவர்களின் நிர்வாகிகள் செயலை என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் உண்மையில் சச்சின் திரைப்படம் ஓடக்கூடிய திரையரங்குகளை நேரில் சென்று பார்த்தல் அங்கு 30 பேர் கூட இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.