VSK ADMK: அதிமுக பாஜகவுடன் வைத்துள்ள கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ரீதியாக அவர் அளித்த பேட்டியில், பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற மதம் சார்ந்த கட்சிகள் அரசியலாக வளர முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக இடது சாரி மற்றும் சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்பது அவர்களின் குறியாக உள்ளது.
அதிலும் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி இவர்கள் முன் வர வேண்டுமென நினைக்கின்றனர். இப்படி இருக்கையில் திமுக மட்டுமின்றி அதிமுகவையும் சாய்க்க முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்த அதிமுக, மீண்டும் அவர்களை தேர்வு செய்துள்ளது முட்டாள் தனமான ஒன்று. இப்படி சங்கர பரிவார் அரசியல் வாதிகள் வளர்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்து அதிமுக கூட்டணி வைத்து வரலாற்று பிழை செய்துள்ளது.
இது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்து துணை போவ கூடாது அதையும் ஏறி போவது வரலாற்றுப் பிழை தான். தமிழர்களின் நலனை பேணி காக்க சமூக நீதி அரசியலையும் நிலைநாட்ட பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்வது நல்லது என தெரிவித்துள்ளார். இவ்வாறு எடப்பாடிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது