சிவாஜி இல்லம் ஜப்தி!.. சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!…

Photo of author

By அசோக்

சிவாஜி இல்லம் ஜப்தி!.. சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!…

அசோக்

Updated on:

prabu

ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனமானது ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்தை நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக சிவாஜி அவர்களின் பேரன் மற்றும் நடிகரான துஷ்யந்த் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடமிருந்து 3, 74,75,000 பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார்.

இந்த கடனானது கட்டப்படாமல் விடப்பட்டதாலும், கடன் பெற்ற பொழுது ஒவ்வொரு மாதமும் 30 சதவிகித வட்டியுடன் சேர்த்து அசலையும் அடைத்து விடும்படி கூறிய நிலையில் அதனை சரிவர செய்யாததால் இது வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வாறு வழக்காக மாற்றப்பட்ட நிலையில் அந்த கடன் தொகை 9 கோடியை தாண்டியது. இந்த வழக்கினை விசாரித்த ஹை கோர்ட் நீதிபதிகள் சிவாஜி அவர்களின் வீட்டை ஜப்தி செய்த அதை விற்று அதில் வரக்கூடிய பணத்தை தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இருக்கு வழங்கச் சொன்னது.

இதனை எதிர்த்து நடிகர் பிரபு அவர்கள் வழக்கு தொடர்ந்து, தான் இதுவரை ஒரு ரூபாய் கூட வெளியில் கடன் பெற்றதில்லை என்றும் தன்னுடைய அண்ணன் ராம்குமார் அவர்கள் வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுவரை கடனை பெற்று விடாத என்னுடைய சொத்துக்களும் இதில் முடக்கப்பட்டுள்ளது என்றும் அன்னை இல்லம் வீட்டை அப்பா என் பெயரில் எழுதி வைத்திருப்பதால் அதை ராம்குமார் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்யக்கூடாது எனவும் மனு அளித்தார்.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார். நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.